Sunday 21 July 2019
Monday 15 July 2019
மலர்களிடம் ஒரு கேள்வி
மலர்கள் மலர்ந்து மடிந்து போனால்
மகிழ்ச்சி இருக்குமா? - இல்லை
மாலைகளாகி தோள்களில் சேர்ந்தால்
புகழ்ச்சி கிடைக்குமா?
வாழ்க்கை என்பது வாழ்ந்து மடியும்
ஓரங்க நாடகமா? - இல்லை
இசைந்து வாழ்ந்து இன்பம் பெருக்கும்
கோயில் தேரோட்டமா?
யாரைக் கேட்டால் தெரியும் என்று
உன்னைக் கேட்கின்றேன்
உண்மை சொல்வாயா? - மலரே
உண்மை சொல்வாயா?
Subscribe to:
Posts (Atom)