Friday 20 September 2019

இன்றேனும் வந்துவிடு


சாளரங்கள்
திறந்தே இருக்கின்றன.
வாசலில்
கதவுகள் இல்லை.
மேகங்கள்
கூரை மேய்வதுண்டு.
மின்னல்
மேனிமீது ஆடைகட்டும்
மெல்லிய இரவு.
மழையில்
நனைந்து மூலையில் நிற்கும்
மடக்கிய குடை.
தென்றல்
திருப்பிய புத்தகப் பக்கத்தில்
மண்ணின் மணம்.
இன்றேனும் வந்துவிடு
கவிதையே.




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்