எப்பொழுதும்
இல்லாதவற்றின் மீதே
பேராவல் எழுகிறது.
பெருநகர அடுக்ககத்தின்
பேதை மனத்தில்
தற்சார்பும்,
சிற்றூர்க் குறுந்தெருவின்
சீரிய மனத்திலெழும்
அடுக்ககக் கனவும்.
முன்பே எழுதிய ஒரு பாடல் செய்தெள்ளிகை (Artificial Intelligence) உதவியால் இசையமைக்கப்பட்டது. பாடல் வரிகளுக்கு நிகரான காட்சி அமைப்புகளை எழுதிய பின் செய்தெள்ளிகை உதவியால் காட்சிகளாக உருமாற்றப்பட்டு அனைத்தையும் இணைத்த விழியம் இது.