Friday 28 April 2017

தெற்கு



தெற்கு

      மாந்தவியலும், மொழியியலும் ஆரம்ப நாட்களிலிருந்தே மாந்தன் பிறந்த தெற்கு திசை நோக்கியே பயணம் செய்ய ஆரம்பித்தன.
      ஆதிச்சநல்லூரும், கொற்கையும் அதை உறுதி செய்துவிட்டன. தற்போது கீழடியும் மாந்த நாகரிகத்தின் உச்ச நிலையொன்றை வெளிக்காட்டி வரலாற்றின் மீது புது வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறது.
      பாண்டியர்கள் பழங்காலந் தொட்டே தென்திசையைப் போற்றி வந்திருக்கிறார்கள். “தென்புலம்என்று கடலில் மூழ்கிய நிலத்தையும் சேர்த்தே அழைத்து வந்திருக்கிறார்கள். “தென்புலங் காவல் என்முதல் பிழைத்ததுஎன்று வீழ்ந்துபட்ட பாண்டியனையும் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம்.
       தெற்கில் பிறந்த மொழி, நாகரிக வளர்ச்சியை வடக்கு நோக்கி நகர்ந்து செல்கையில் தம்மோடு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
       பாண்டியர்கள்தென்னவன்என்றும் அழைக்கப் பட்டார்கள். தென்திசை பாண்டியர்களுக்குச் சிறப்பானது. அது மாந்தன் பிறந்த நன்னிலம், மெய்யியலும் மருத்துவமும் பிறந்த சிறந்த நிலம் என்றும் எண்ணினார்கள். அந்தத் திசை நோக்கி வழிபட்டார்கள்.
       தென் திசை நோக்கிக் கால்நீட்டித் தூங்கமாட்டார்கள். இதையே பின்னால் வந்த வைதிகம்வடக்கில் தலைவைத்துப் படுக்கக்கூடாதுஎன்று புரியாமலோ இல்லை வேண்டுமென்றோ மாற்றிக் கூறி வந்திருக்கலாம்.
       இன்றும்கூட யாராவது இறந்து போனால் அவரைக் குளிப்பாட்டி தென்திசை நோக்கித் தலை இருக்குமாறு கிடத்துகிறார்கள்.
       தென்திசையை அறிவு வளர்ச்சியின் குறியீடாக வைத்திருந்ததை மறந்து அதை எமன் திசை என்றும், வடக்கே தலை வைத்தால் காந்தப்புலம் உடலில் நுழைந்து ஏதாவது செய்துவிடும் என்றெல்லாம் நாமும் மாறிப்போனது வியப்பே.
                “” தென்திசை ஆண்ட தென்னவன் வாழி””

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்