Saturday 29 April 2017

இசைபட வாழ்தல்

 .........இசைபட வாழ்தல்

          --------------------

தறிகெட்டோடும் வண்டிகளிலும்

தொட்டுணரமுடியா கணினி உலகிலும்

கடனட்டைகளின் சிராய்ப்புகளிலும்

திரையரங்கு இருட்டுக்குள்ளும்

உயிரற்ற உணவினூடும்

இறுக்கி அடைக்கப்பட்ட

குளிரூட்டிய அறைகளுக்குள்ளும்

ஆடம்பரப் பொருட்களுக்குள்ளும்

ஆங்கிலக் கல்விக்குள்ளும்

வாழ்க்கை இருப்பதாய் எண்ணி

துரத்தித்துரத்தி ஓடுகிறோம்

பிடிக்க முடியவில்லை

ஆனால்

அது உங்கள் நுழைவாயில்

அருகே

பசியெடுத்த குழந்தையென

காத்துக்கொண்டிருக்கிறது

உங்கள் படையலுக்காய். 


ப.மாதேவன்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்