Friday 1 January 2021

முதல் பதிவு 2021

தாய்ச் சொல் 

=============

 

தமிழுக்கு முன்னே

தடங்கள் ஏதுமில்லை.

தொண்டு

எம் மூத்தோர் நாவினில்

தோன்றி,

பண்டே சிறந்த

எம் தாய் படைத்த

நற் பெரு வழியில்,

பின்னொரு நாளில்

பிறந்த குழவியொடு

நடந்தோர் நவிலும்

நாளொன்றிற்கு,

நட்பின் கிழமையில்

நானும் உரைத்தேன்

வாழி! என.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்