Saturday 15 October 2022

மூன்று செய்திகள்: ஒரு கவிதை

 


மூன்று செய்திகள்: ஒரு கவிதை.


மீத்தேனை வெல்லுதல்: காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மீத்தேன் உமிழ்வைத் தடுப்பது ஏன் முக்கியமானது?

இந்தியாவில் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வுகள் பெரும்பாலும் விவசாயத் துறையில் இருந்து பதிவாகியுள்ளன, ஏனெனில் கால்நடை உர மேலாண்மை மற்றும் விவசாயம் ஆகியவை மீத்தேன் ஆதாரங்களாக உள்ளன" என்று, பெங்களூருவை சேர்ந்த சிந்தனைக் குழுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் (CSTEP) காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையின் துறைத் தலைவர் இந்து மூர்த்தி,

இந்தியா ஸ்பெண்டிடம் இடம் கூறினார்.



உலகின் மிகப்பெரிய கால்நடைகள் மற்றும் இரண்டாவது பெரிய அரிசி உற்பத்தி செய்யும் இந்தியாவில், எரிசக்தி துறையை விட ஐந்து மடங்கு அதிக மீத்தேன் வாயுவை விவசாயத் துறை வெளியிடுகிறது. உலகளாவிய மீத்தேன் டிராக்கர் 2022 இன் படி, மொத்த மீத்தேன் வெளியேற்றத்தில் விவசாயம் 61% ஆகும், அதே நேரத்தில் இந்தியாவின் ஆற்றல் துறை 16.4% மற்றும் கழிவு 19.8% ஆகும்

https://tamil.indiaspend.com/explainers/chasing-methane-why-curbing-methane-emissions-is-crucial-to-fighting-climate-change-828860


 நியூசிலாந்து அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அதன்படி பர்ப்பிங் என்ற பெயரில் ஆடு மாடுகளுக்கான ஏப்பத்துக்கு வரியும், பீயிங் என்ற பெயரில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சிறுநீர் கழிப்பதற்கும் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ் ஏப்பம், சிறுநீர் கழித்தலுக்கான வரி எவ்வளவு என்பது இன்னும் குறிப்பிடப்படாத நிலையில், இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் 2025ல் வரி செலுத்த தொடங்குவார்கள் பணம் செலுத்தத் தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.

 https://tamil.oneindia.com/news/international/amid-of-climate-change-new-zealand-will-implement-to-collect-cow-burps-tax/articlecontent-pf781390-480094.html


கோவையில் 9.12 லட்சம் வீடுகளுக்கு மீத்தேன் சமையல் கியாஸ் இணைப்பு.

கேரள மாநிலம் கொச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலையில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு எனப்படும் மீத்தேன் கியாஸ் (சி.என்.ஜி.) கொண்டு வரப்படும் பின்னர் அங்கிருந்து பெங்களூருவுக்கு அந்த மீத்தேன் சமையல் கியாஸ் குழாய் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது. இதில் கேரள மாநிலம் கூட்டாடு பகுதியில் இருந்து கோவைக்கு இரும்பு குழாய்கள் மூலம் மீத்தேன் கியாஸ் கொண்டு வரப்படும். இவ்வாறு கொண்டு வரப்படும் மீத்தேன் கியாஸ் பிச்சனூர் பகுதியில் இருந்து கோவையின் அனைத்து பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படும்.

https://www.dailythanthi.com/News/State/connection-of-methane-cooking-gas-to-912-lakh-households-767799


இழுப்பது வண்டியென்றாலும்

உழுவதென்னவோ

கொழுமுனைதான்.


விதைப்பது இயந்திரமென்றாலும்

முளைப்பதென்னவோ

நெல்மணிதான்.


கணினியைக்

கவளமாக்கி உண்ணும்

காலம் வந்தால்

கைத்தடியால் விரட்டலாம்.


நிலக்கரியை உண்ணலாமென்றால்

நிலத்தைத் தோண்டலாம்.


உரக்கச் சொல்வேன்!


அவர்

முதுகில் அடிவிழுந்தால்

நம் குழந்தை கேவி அழும்.


அவர்

நிலம் பிடுங்கப்பட்டால்

நம் குழந்தை இரந்துண்ணும்.


சொன்னால் புரியாது

சோமாலியாவின்

வரலாறு!




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்