Monday, 17 November 2025

புகைவண்டிச் சாரளம்


ஒன்றரை அடி
சாளரத்துக்கு வெளியே
உலகம் நடக்கிறது.

கொண்டுவந்த நீரைக்
கொட்டிவிட்டு
நீர் முகரப் போயிருக்கிறது
மேகம்.

மழை கழுவித் துடைத்த
மண் அழகு. 
தூசியிழந்து உயிர்ப் பச்சை
காட்டும்
மரங்கள் பேரழகு.

சிறகுலர்ததும் காக்கை,
உடல் சிலிர்க்கும் குருவி,
பரபரக்கும் தட்டான்கள்,
பனையடி உரசும் செம்மறியாடு,
சேற்றில் நடக்கும் கொக்கு,
ஆற்றில் ஓடும் கலங்கிய நீர்,
அரவமற்ற கருஞ்சாலை...

அடடா எத்தனை அழகு.
ஒப்பனை இழந்தால்
மொத்தமும் அழகு.

வாழிய.. வான் மழை.

=====================
சிராப்பள்ளி ப.மாதேவன்
17/11/2020
=====================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்