Saturday 2 February 2019

ஈனப் பெருஞ்சுவர்


அன்று
 
கட்டைச்சுவற்றில்
 
கரித்துண்டு கொண்டு
 
யாருக்கும் தெரியாமல்
 
சொற்களால் எழுதப்பட்ட
 
படங்களாய்,
 
 
இன்று
 
இணையப் பெருஞ்சுவற்றில்
 
அடையாளம் தெரியாதவரால்
 
பகிரப்பட்ட படத்திலிருந்து
 
உதிரும் சொற்களாய்,

 
 
எப்பொழுதும்
 
துகிலுரியப்படுபவள்
 
அவளே.
 
 
ஆண்டுகள்
 
தாண்டியும் மாறிடாத
 
ஆண்மனம்.




2 comments:

  1. மனதைத் தொட்ட கவிதை. பாராட்டுகள் மாதேவன்.

    நேற்று தான் உங்கள் வலைப்பூ காணக் கிடைத்தது. தொடர்ந்து சந்திப்போம்...

    உங்களைத் தொடர மின்னஞ்சல் மூலம் தொடரும் வசதி அல்லது ஃபாலோயர்ஸ் வசதியோ இணைத்தால் நல்லது. புதிய புதிவு வெளிவரும் போது வந்து படிக்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி.
      தொடரும் வசதி வலப்பக்க மேல் மூலையில் உள்ளது.
      மிக்க நன்றி

      Delete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்