Thursday 6 January 2022

ஏ.ஆர்.இரகுமான் பிறந்தநாள் 2022




தமிழ்த் திரை இசைவானின்
மூன்றாம் கதிரவன்.

என் வீட்டுத்தோட்டத்தின்
பூக்களுக்காய் ஒலித்த
புதிய புல்லாங்குழல்..

சாளரக் கம்பிகளில்
சிறகால் தட்டி இசைத்த
பட்டாம்பூச்சி.

ஓசைகளை அடுக்கி உயர்ந்து
விருதுகளை வீழ்த்திய
மண்ணின் கலைஞன்.

கருணாமிருத சாகரத்தின்
பண்ணுயர்வை
உலகம் அறிய
ஒலிக்கத்துடிக்கும் இசையே
வாழி ! நீ வாழி! வாழி!!

========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
06-01-2022
========================


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்