Tuesday 6 March 2018

பெண்



குறிஞ்சிக் காடுகளில்

முல்லைக் கான்வெளியில்

எல்லைகளின்றித் திரிந்தபோது

உம் சொல் கேட்டே உயிர்த்திருந்தோம்.

மருதம் புகுந்த பின்னே

ஊடலை உமக்கென்றாக்கி

வேட்டலில் வேறுவேறானோம்.

ஆநிரை கவர்தல் மறந்து

அரையரின் அரணழித்து

கழுதையோட்டி எருக்கு விதைத்தக்

காலமும் போய்

உம்மைச் சிறையெடுத்து

ஒரு மூடன் தொடங்கிவைத்தான்

மண்ணையழிக்கும் மடத்தனத்தை.

அது இன்றும் தொடர்கிறதே.

மண்ணும் ஆறும் மலையும் கடலும்

உன்னைத் தேடி உயிரதிர உருகுவதைக்

காண்கிலையோ பெண்ணே.

விண்ணதிர எழுந்துவா மறுபடி

உன்னில் தொடங்கட்டும் உலகு.












No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்