Monday 10 June 2019

பாவலரேறு நினைவு நாள் 2019


வடபனிப் பெருந்திரள்
இடனேர்பு திரீஇ
பொதியில் மலையின்
பொற்றமிழ் சூழும்
பொல்லா நாளில்
இல்லாது போனீரே,
எந்தையே.
உம்,
அறத்திறம் யார்
நெஞ்சிடை வைத்தீர்;
தீக்கனல் எந்தப்
பொந்திடை வைத்தீர்.
தீத்திறம் வளர்ப்போர்
ஆவி குடித்திட
பாழி குடிக்கும் ஊழிக்காற்றென
மறுபடியொருமுறை எம்
மண்ணில் பிறப்பீரே.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்