Monday 18 November 2019

வெறும் பயணிகள் நாங்கள் (வ.உ.சி. நினைவுநாள் 2019)

ஒரு தொடர்வண்டிப் பயணத்தில்
சாளரங்களின் வெளியே கடந்துபோகிற
மரங்களைப் போலே,
உங்களையெல்லாம்
கடந்தவுடன் மறந்து போனோம்.
அதே தடம்
அதே வண்டி
இன்னொரு பயணம்
அப்போதும்
நீங்கள் இருந்த நினைப்புகூட
எம்மிடம் இல்லை.
நீங்கள் வாழ்ந்தீர்களா
வெட்டப்பட்டு வீழ்ந்தீர்களா
எந்தக் கவலையும் எமக்கில்லை.
எங்கள் மூச்சுக்காற்றில்
நீங்கள் கொடுத்த உயிர்வளியும்
இருக்கிறது என்ற எண்ணமும் இல்லை.
ஆனாலும்
நீங்கள் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு.
கடலில் கரையும் பெருங்காயமாகும்
வெறும் பயணிகள் நாங்கள்.


 சிராப்பள்ளி ப.மாதேவன்
18/11/2019

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்