Tuesday 26 November 2019

மூதில் மகளிர் (மாவீரர்களின் அன்னையற்கு)

நெருப்பைச் சுமந்திருந்த
கருப்பைகள்,
எரிமலைகளுக்குப் பாலூட்டிய
வார்முலைகள்,
புயல்கள் படுத்துறங்கிய
தாய்மடிகள்,
பெருங்கடல்கள் அமர்ந்திருந்த
ஒக்கலைகள்,
ஈழமெங்கிலும்
ஏராளம் அன்னையர்
மூதில் மகளிர்
ஆதல் தகுமே.
மாசாத்தியார் சொல்கொண்டு
தொழுவேன்,
கெடுகசிந்தை கடிதிவர் துணிவே.




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்