Sunday 29 April 2018
Saturday 28 April 2018
Tuesday 17 April 2018
குறுகத் தறிபடட்டும்...
அது எப்படியடா
விறைக்கும்போது மட்டும்
சாதி மதம் இனம் மொழி
கல்வி பதவி வயது என
அத்தனையும் தள்ளி வைக்கிறாய்.
ஒற்றைக் குறியிருக்கும் திமிரோ?
எரிமலையிலும் உண்டடா குழி.
ஏறிப் பாயடா
வீணில் பிறந்தவனே.
ஆணெனும் திமிரே
அந்தக் குறியெனில்
பெண்ணுடம்பில் ஓர்நாள்
பேரியற்கை
புலிப்பல் வளர்க்குமடா
அன்று
குறுகத் தறிபடட்டும் உன் குறி.
Subscribe to:
Posts (Atom)