Monday 23 September 2019

கீழடி ...கடவுள் வழிபாடு

இதை கிளிக் செய்யவும் 👉   https://youtu.be/5WKgUKGybX8

கீழடியில் தெய்வவழிபாடு இருந்ததா? 2600 ஆண்டுகளுக்கு முந்தைய வழிபாட்டு முறை என்ன? கீழடியில் மத அடையாளங்கள் இதுவரை கிடைக்கவில்லை. மதம் இருந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவே. ஆனால், தெய்வ வழிபாடு ?
ஒரு நீண்ட தேடலும், பதிலும்.


Friday 20 September 2019

இன்றேனும் வந்துவிடு


சாளரங்கள்
திறந்தே இருக்கின்றன.
வாசலில்
கதவுகள் இல்லை.
மேகங்கள்
கூரை மேய்வதுண்டு.
மின்னல்
மேனிமீது ஆடைகட்டும்
மெல்லிய இரவு.
மழையில்
நனைந்து மூலையில் நிற்கும்
மடக்கிய குடை.
தென்றல்
திருப்பிய புத்தகப் பக்கத்தில்
மண்ணின் மணம்.
இன்றேனும் வந்துவிடு
கவிதையே.