Tuesday 17 July 2018

வலி


எல்லா மொழியிலும் கேட்கிறது
 
பெண்ணின் அலறல்.

 
எல்லா நிலத்திலும் சிந்துகிறது

 
அவள் குருதி.


 
எல்லா தெய்வங்களும்


காட்சிமறைத்தன
 
அவள் கண் இருண்டபோது.

 
எல்லா மதங்களும்


கட்டுண்டு கிடக்கின்றன,
 
பிடுங்கி எறியப்பட்ட

 
அவள் மயிர்ச்சுருளில்.

 
எல்லா நாட்டிலும் இருக்கிறது

 
அவளைக் காக்கத் தடைச்சட்டம்.

 
மனிதம் மறைந்து கொண்டது

 
கிழித்தவன் விரல் நகக்கண்ணில்.

 
வலியைக் கொடுத்தவனை


 
வதைத்தாலும் தீராதே

 
ஊரார் தீ நாக்கு

 
அவளைத்  தீண்டும் வலி.




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்