வலிகளுக்கெல்லாம்
அழவேண்டுமெனில்,
சிரிப்பதற்கென்று
இன்னொருமுறை
பிறக்கவேண்டியிருக்கும்.
19-06-2020
சென்னையில், ஒரு மணி நேரமாகப் பெருங்காற்றுடன் பெய்து கொண்டிருந்த சிறு மழையும் ஓய்ந்து மெல்லிய தூறல் விழுந்து கொண்டிருக்கிறது. மாலை நேரத்து மென் குளிர். படித்துக் கொண்டிருந்த புத்தகப் பக்கங்களுக்கிடையே, உருகிய சருக்கரையில் குழையும் சுக்கின் நறுமணம். கூடவே குமுளிமெட்டின் ஏலக்காய் உடைந்து, கொதிக்கும் அரிசிமாவில் சுருண்டு சுருண்டு எழுந்து காற்றில் தெளிக்கும் நறு நாற்றம். அடுக்களை நோக்கி நடக்கிறேன். உருளியில் மாம்பால் கொதித்துக்கொண்டிருக்கிறது. மெல்லிய நார் கொண்ட மாம்பழத் துண்டுகள் கூழில் மேலெழுந்து மேலெழுந்து அடங்குகின்றன.
திரு "சாம்பசிவம் பிள்ளை" தொகுப்பித்த மருத்துவம் மற்றும் அறிவியல்; ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி, சித்தமருத்துவத்தில் கண் தொடர்பான சொற்களை வகைப்படுத்தும் போது ஐம்பத்தியோரு வகையான கண்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது.
பொதுவாகவே புத்தகம் எனப்படுவது கருத்தாழம் மிக்கதாக இருக்க வேண்டும். அதன் செறிவு படித்து முடித்த பின் உள்ளத்துள் பொருள் சுரந்து அறிவை விரிவு செய்ய வேண்டும்.
அதற்காக; சிக்கலான சொற்களால் எளிதில் படிக்க இயலாமல் இருக்கக் கூடாது. பல புத்தகங்களின் பொதுப்பொருள் படிக்க எளிதாகவும், அதன் உட்பொருள் உணர்ந்து உள்வாங்க அரிதாகவும் இருக்கும்.
இந்தக் கருத்துக்கு ஓர் உவமை சொல்லி எழுதப் பெற்ற நாலடியார் பாடல் ஒன்று வியக்க வைத்தது. உலகியல் அறிந்து எழுதிய பாடல் இது.
பொருளுரை: பெறத்தக்கப் பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேம்போக்கான நெறிப்படி படிப்பவர் எல்லோருக்கும் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.
பொது மகளிர் விரும்பி அதைச் செய்யவில்லை என்பதையும், அவர் நெஞ்சுக்குள்ளே பல கனவுகள், மனக்காயங்கள் இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொண்டே இந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. நூலின் உட்கருத்தை அறிய நூலாசிரியரின் போக்கிலேயே, அவரின் காலத்திற்கே சென்று படிக்க வேண்டும். அதுவே சரியான நெறியாகும்.
செவ்விலக்கியப் பரப்பில் பாக்கள் மிகுதி. பல குறட்பாக்களின் வழியாக இந்த துய்த்தலின்பத்தை வள்ளுவர் அடிக்கடி வழங்குவார்.
பொதுமகளிர், பரத்தை போன்ற சொற்பயன்பாடுகளில் சிலருக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால், “மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி: (அகநானூறு 146). என்ற வரியிலிருந்து பரத்தன் என்ற சொல்லும் வழக்கிலிருந்தமை அறிய முடிகின்றது.
மலர்கிறோம் என்பதை
மலர்கள் அறியுமா?
பாய்கிறோம் என்பதை
அருவிகள் உணருமா?
ஓடும் ஆறுகள்
ஓய்வினைத் துய்க்குமா?
தேங்கிய ஏரிகள்
ஓடிட எண்ணுமா?
நூறு கூறாய் நொடியைத் துணித்த,
இம்மியளவு இடைவெளியில்;
உள்ளில் கிளர்ந்த
மகிழ்வின் நிகழ்வை,
மறுபடியொருமுறை
மனம் பெற இயலுமா?
இலைகளின் மீது
கவிதைகளாய்ப் படரும்
தூவானக் கண்ணாடிகளில்
முகம் பார்க்கக்
காத்துக் கிடக்கின்றன,
இலைகளின் முதுகில்
கூட்டுப் புழுக்களாய்…
பட்டாம் பூச்சிகள்.
03-05-2025
உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.
என்ற,
பாட்டன் எண்ணங்கள் சில
கடன் வாங்கிப்
ஙா... ங்ஙா... என்று
ஒற்றை எழுத்தை
மட்டுமே
உதட்டில் நிறைத்து
கை கால் உதறியபோது;
இரவும் பகலும்
அன்பொழுக
அத்தனையும் பேசி வளர்த்த
அம்மாவிடம் பேச,
சொற்கள் தேடி அலைகிறது,
அந்தத்
தலை நரைத்த குழந்தை.
பல நூறு செடிகொடிகள் இருக்க பாரி ஏன் முல்லைக்குத் தேர் கொடுத்தான்?
மரஞ் செடி கொடிகள் தாமாக வளரும். வெயிலின் போக்கில் தலை உயர்த்தும் மரங்கள். கதிரவனுக்கு முகம் காட்டி வளைந்து நெளிந்து வளர்ந்து நிற்கும் தென்னைமரங்கள் பல்லாயிரம். தலை உயர உயர தண்டு பருத்து வலு சேர்க்கும் செடிகள்.
கொடி என்பது துவளும் தன்மை கொண்ட அல்லது ஒன்றின் மேல் படரக்கூடிய பயிரி ஆகும். பொதுவாகப் பந்தல், கயிறு, வேறு மரங்கள் என வேறுவொரு பொருளின் பிடியுடன் இக்கொடிகள் வளரும். பெரும்பாலன பற்றுக்கொடி வகைகளில், கோணமொட்டுகள், பற்றுக்கம்பிகளாக மாறும். கொடிகள், முறுக்கும் தண்டு, வான்வழி வேர்கள் அல்லது ஒட்டும் வட்டுகளைப் பயன்படுத்தி தங்களைத் தாங்கிக் கொண்டு ஏறுகின்றன இப்படி இறுக்கும் பயிரிகளுக்கு அவை சுற்றிச் செல்லக்கூடிய குறுகிய கொம்புகள் கொண்ட உறுதியான ஆதரவு தேவை. சில கொடிகள், ஒட்டிக்கொள்ள சிறிய வான்வழி வேர்களைப் பயன்படுத்துகின்றன, எனவே அவற்றுக்கு அதிக உதவி தேவையில்லை. பிசின் வட்டுகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் கொடி வகைகளும் உண்டு.
அவன் நடக்கிறான்,