மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டும் புதுச் சிந்தனைகளைத் தந்தும் இத்தனை ஆண்டுகளாக உயிர்ப்போடு இருக்கின்ற திருக்குறளுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம். பலவாறான கருத்துகளைத் தாங்கிய உரைகள் ஏராளம் கண்டது திருக்குறளே. அண்மையில் வள்ளுவத்துக்கு உரையெழுதி வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. சிறப்புதான். அவரது கருத்துகளும் வளம் சேர்க்கலாம். உருவகங்கள் ஒருவேளை இளையோரைச் சென்றடையலாம். நல்லதுதான்.
ஆனால், தன் உரை குறித்து விளம்பரப்படுத்தும் முகமாக,
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் - 55) எனும் குறளுக்கு;
"கடவுளைத் தொழாது கணவனையே தொழுது எழும் இல்லறத் தலைவி பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்று காலங்கலமாகச் சொல்லப்பட்டு வந்தது. இதுதான் பொருள் என்றால் அது சர்ச்சைக்குத்தான் ஆளாகும். அந்த சர்ச்சையை என் உரையில் நான் சரி செய்திருக்கிறேன். எழுதியிருக்கிறேன் 'கட்டமைக்கப்பட்டத் தெய்வங்களைத் தொழாமல் கட்டி வந்த கணவனையே தொழுது எழுகின்ற ஒரு பெண், பெய் என்று சொன்னவுடன் பெய்கின்ற மழை எப்படி நன்மை தருமோ அப்படி நன்மை தருவாள் என்று எழுதியிருக்கிறேன். சர்ச்சைக்கு இடமில்லை. பெண்ணுக்கும் பிழையில்லை." என ஒழு விழியத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.