(இணைக்குறள் ஆசிரியப்பா)
வான்வளி தன்தொழில் மறந்து வானின்று
தான்பொழி நன்முகில் பொய்த்து நெடும்புனல்
அழுவத் துநீர்மை குறைந் திடினும்
விழுமியர் வஉசி உளங் கொண்ட
நேர்மை குன்றா தென்பது
சீர்மை மிக்க உயர் வாழ்வால்
அறிந்த திவ்வுல கவர் தீரா
உறுதியொ டுவாழ்ந்து மறைந்த பின்னே.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்