Tuesday 11 January 2022

திருமுன் தமிழ் - தாழைப்பத்து 4

 


பாடல் 4: இறைப் பெயர் விளக்கம்

சங்கரநயினார்கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள மலையடிக்குறிச்சியில் ஒரு குடைவரைக் கோவில் இருக்கிறது. அங்கே காணப்பெறும் கல்வெட்டு (கிபி 620 - 642) “மாறன் மகன் சேந்தன்” எனக் குறிப்பிடுகிறது.

நெல்லையப்பர் கோயில் கல்வெட்டொன்று “மலைமண்டலத்துத் தாழைக்குடி சேந்தபிரான்” என சேந்தன் கட்டிய இந்தக் கோயில் இறைவனின் பெயரைக் குறிப்பிடுகிறது.

புலவர் ஆர்.பத்மநாப்பிள்ளை அவர்கள் எழுதிய “தாழைக்குடிச் சரிதம்” எனும் நூலும் இந்தக் கோயில் இறைவனை “சேந்தனீசுவரமுடைய நயினார்” என்று குறிப்பிடுகிறது.

செழியன் சேந்தன் கட்டிய இந்தக் கோயில் இறைவன் “சேந்தளீசுவரமுடைய நயினார்” என்றே பண்டைய நாட்களில் அழைக்கப்பட்டிருக்கிறார். சேந்தன் என்ற பெயர் தாங்கியோரும் இவ்வூரில் உண்டு.

யானைப் படைகள் ஏராளம் கொண்டிருந்ததால் “சிலைதடக்கைக் கொலைக் களிற்றுச் செழியன்” என்ற சிறப்புப் பெயரும் சேந்தனுக்கு உண்டு. அதன் காரணமாகவே யானை நுழையும் அளவுகொண்ட கருவறை அமைத்தானோ? 

இங்கு நடைபெறும் திருவிழாவில் “யானை கழூஉப் போடுதலும் உண்டு.

 

சொற்பொருள்:

மலையடிச் சீரூர் - வாசுதேவநல்லூர் அருகில் உள்ள மலையடிக்குறிச்சி

குகைவரி - குடவரைக் கோயில் கல்வெட்டு

சிலைதடக்கை - சேந்தன் செழியனின் சிறப்புப் பெயர் முன்னொட்டு

மலைமண்டலம் - நாஞ்சில்நாடு

 

பாடல் 4 : பெயர் வரலாறு

 மலையடிச் சீரூர் குகைவரி சொல்லும்/

சிலைதடக் கைச்செ ழியன்பெ யரொடு/

மலைமண் டலசேந் தளீசுவ ரத்து/

உடையார் நயினாரா னார்./

 

மலையடிக்குறிச்சிக் கவெட்டு

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்