Friday 13 August 2021

திரு பெ.ஆறுமுகம் பிள்ளை மறைவு

 


உள்ளிருந் தரற்றி ஊமையா யழுதேன்/
அள்ளியென் எழுத்தை ஆரத் தழுவி/
கள்ளிருக் கும்மல ரறிந்த வண்டென/
உள்ளம் பிறர் அறிய உரைத்து,/
தெள்ளிய தறிந்தோர் நல்திறன் சொல்ல/
உள்ளிருந் துவகை பொங்க அன்பொடு/
சொல்லிய ஒருசொல் லாலென் மனதில்/
பல்லியம் முழங்க வைத்த பெருந்தகையே./
முள்கிழித் தசிற கில்முறி மருந்திட்டு/
புள்வளர்த் துவான் விடுவார் பல்லோர்/
உள்ளடைக் கூண்டு டைத்துப் பறவை/
வெள்ளி காணவெ ளிவிடுவார் சிலரே/
உள்ளத் தில்சிற குலர்த்தி, பறக்கத்/
தள்ளாடும் பறவைக்கு, கேளாது வானம்தந்த/
வள்ளல் உம்போல் யார்கொல்! எமக்கே?/
. (நிலைமண்டில ஆசிரியப்பா)
==========================
கலங்கிய நெஞ்சத்துடன்
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
13-08-2021
==========================
 
நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியின் மேனாள் தலைவரும், கடுக்கரையைச் சேர்ந்த பொறியாளருமான திரு பெ.ஆறுமுகம் பிள்ளை 13-08-2021 அன்று மறைந்தார். பேரிழப்பு.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்