உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.
என்ற,
பாட்டன் எண்ணங்கள் சில
கடன் வாங்கிப்
பாட முனைந்தேன்
சிறு கவிதை.
குருதி முடங்கும் தமிழ்த்தாயின்
நரம்புகள் நீவி
குணப்படுத்துவது கவிதை.
அவள் உறுப்புகள் சிதைக்கும்
இரண்டகர் தம்
உருவம் காட்டுவது கவிதை.
ஆங்கிலம் மேவி அழிக்கும்
தமிழுக்கு - நல்ல
ஆற்றல் சேர்ப்பது கவிதை.
பிழைகள் பொதிந்து இலக்கியம்
படைப்போர் எழுத்தை
மறுத்துரைப்பது கவிதை.
தமிழைக் கொண்டே தமிழை
அழிக்கும் - கயமை
கழுவிக் களைவது கவிதை.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்