Saturday, 15 March 2025

சந்தித்'தேன்'...




முதலாம் நரசிம்மவர்மன் “சேர, சோழ, பாண்டிய, களப்பிரரை மீண்டும் மீண்டும் போரில் முறியடித்தவன்; பல போர்கள் புரிந்தவன். அப்பெருமகன் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புலிகேசியைத் தோற்று ஓடச் செய்தவன். புலிகேசி புறமுதுகிட்டு ஓடிய பொழுது ‘வெற்றி’ என்னும் சொல்லை. அவனது முதுகாகிய பட்டயத்தில் எழுதியவன்” என்று கூரம் செப்பேடு இயம்புகிறது.
இதில் காணப்படும் மணிமங்கலப் போர் என்பது பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே, தற்காலக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் என்ற ஊரில் கிபி 640 இல் நடைபெற்றது. இப்போர் சாளுக்கியர்களுக்கு எதிராக பல்லவர்களுக்கான முதல் வெற்றி கிடைத்த போராகும். மேலும் இரண்டாம் புலிகேசியிடம் பெற்ற நான்கு தோல்விகளுக்குப் பின் பல்லவர்களின் முதலாவது வெற்றியுமாகும். இப்போரில் இரண்டாம் புலிகேசி தோல்வி அடைந்து, பின் வாங்கித் திரும்பினான்.
கடந்த சனிக்கிழமை(08-03-2025), இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் ஆய்வாளர் திரு ரெங்கையா முருகனோடு ஒரு பொழுது கழிந்தது. வழமை போல, அரவமற்ற கோயில் பரம்பைச் செய்திகளால் நிறைத்தார். மகிழ்வான நாள்.
தீராத பயண வேட்கையும் தேடலும் நிறைந்த அவரிடம் கேட்பதற்கு இன்னும் ஏராளம் இருக்கின்றன. உணர்வொழுக அவர் சொல்வதைக் கேட்க பல நாள் வேண்டும். புத்துணர்வு எழ எழுதுவதற்கான ஊக்கம் பெற்று, இன்னொருமுறை சந்திக்கலாம் என்று கூறி விடைபெற்றேன்.
======================
சிராப்பள்ளி ப.மாதேவன்
15-03-2025
======================

அரிகண்டம் - சிற்பம்

மணிமங்கலம் கோயில் பரம்பு

கூரம் செப்பேடு

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்