உன்னைக் கரைத்த
நீரில் மிதக்கின்றன
அன்பின் திசுக்கள்.
உறவுகளின் கண்ணின்
ஓரமெங்கும்
கண்ணீர் தேங்கிய பாசம்.
மரணத்தின்போது
மறுபடி பிறந்தவனே,
ஆண்களின் கண்ணீரில்
அதிகம் நனைந்தது
உன்னுடல்.
பெருவாழ்க்கை என்பது
பொருள் மட்டுமில்லை என
மரணத்தால் அறிவித்தாய்.
மறந்து மறந்தாலும்,
காலம்
மறுபடி மறுபடி
உன்னை
எம் மனங்களில்
உயிர்ப்பிக்கும்.
வர மாட்டாய்
எனத் தெரிந்தும்
வாவென்று அழைக்கும்
உறவுகளின் ஓலத்தில்,
சாவா வாழ்வுனக்கு.
காலத்தின் மடியில்
அமைதியுறு தம்பி.
========================
சிராப்பள்ளி ப.மாதேவன்
31-02-2022
========================
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்