திரு "சாம்பசிவம் பிள்ளை" தொகுப்பித்த மருத்துவம் மற்றும் அறிவியல்; ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி, சித்தமருத்துவத்தில் கண் தொடர்பான சொற்களை வகைப்படுத்தும் போது ஐம்பத்தியோரு வகையான கண்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது.
அவை அமைப்பு மற்றும் நோய் தொடர்பானவை. அறிவியல் அணுகுமுறையிலான இந்த 'வகைப்படுத்தல்' நம் தனிச் சொத்து. இத்தகைய அணுகுமுறையே தொல்கபிலர் போன்றோரின் சாங்கிய / எண்ணியச் சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக இருத்தல் கூடும். தொல்காப்பிய மரபியலும் அதை வழிமொழிவதாகவே காணக்கிடைக்கிறது.
. கண்களின் பெயர்கள்
. ==================
கருடக்கண்,
காக்கைக்கண்,
முண்டைக்கண்,
ஆந்தைக்கண்,
யானைக்கண்,
பூனைக்கண்,
மீன்கண்,
ஓரக்கண்,
செங்கண், அல்லது அரத்தக் கண்,
மயிர்கண்,
மாட்டுக்கண்,
மைக்கண்,
சாக்கண் அல்லது பஞ்சடைந்த கண்,
சாயல்கண்,
மஞ்சட்கண்,
குண்டு மணிக்கண்,
குருட்டுக்கண்,
இராக்கண்,
அழிகண்,
ஒற்றைக்கண்,
முக்கண்,
கூச்சக்கண்,
கூர்மைக்கண்,
ஊனக்கண்,
மயக்குங்கண்,
ஒட்டுக்கண்,
மாலைக் கண்,
பகற்கண்,
புளித்தகண்,
இளித்தற்கண்,
கொள்ளிக்கண்,
உள்ளங்கண்,
விரிகண்,
சுழற்கண்,
சுற்றுக் கண்,
பறவைக்கண்,
சுருங்குக் கண்,
கடைக்கண்,
புகைச்சற்கண்,
பூக்கண்,
பீளைக்கண்,
இருட்கண்,
கீழ்க்கண்,
திறந்தகண்,
சிமிட்டுக்கண்,
நிலைக் குத்தற்கண்,
பொய்க்கண்,
பிரிகண்,
சுழிகண் அல்லது உள் வளைந்த கண்,
நாலுகண்,
இழிகண்
என வகைப்படுத்திப் பெயரிடப்பட்டுள்ளன.
=======================
சிராப்பள்ளி ப.மாதேவன்
06-06-2025
=======================
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்