Tuesday 2 April 2019

இயக்குநர் மகேந்திரன் மறைவு


நார்களில் கட்டுப்பட விரும்பாத
உதிரிப்பூ இவன்.
பருவம் பாடிய புதிய பாடலை,
பார்த்தவர் கண்களுக்குள்
மைகொண்டு எழுதிவன்.
ஓசை எழுப்பாத மெட்டியின்
ஒலிகொண்டு கதை சொல்லி
நெஞ்சங்களைக் கிள்ளிப்போனவன்.
சொல்லித்தந்த வானம் தந்தையென்று
அழகை அறிமுகப்படுத்திய
அருங்கலைஞன்.
மெல்லிய பூவிதழாய்
சொற்கள் சேர்த்து
வல்லிய திரைமொழி பேசிய
காலம் தந்த படைப்பாளி.
இனி
யார் தொட்டு காயும்
நீ மறைந்ததால்
உண்டான காயம்.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்