Friday 5 April 2019

குப்பை


இப்பொழுதெல்லாம் இரண்டுமுறை
கூட்டவேண்டியிருக்கிறது.
தெருவெங்கும்
புழுதியை விட அதிகம் கிடக்கின்றன
பொய்கள்.
வாசலெங்கும்
காலில் இடறுகிறது வசைச்சொல்
குப்பை.
பெருக்கி ஒதுக்கிவிட்டு
பெருமூச்செறிந்தாள்.
தேர்தல் முடியும் வரை
நாளும் குப்பையடா
நம் வீட்டு வாசலிலே.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்